உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் உள்ள பயனர்களுக்கு ஸ்டிக்கர் சஜஷன் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அம்சம் பீட்டா பயணர்களின் whatsapp இன் கீபோர்டு மேல் புறத்தில் ஸ்டிக்கர் டிரே கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எமோஜிகளுடன் கூடிய ஸ்டிக்கர்கள் இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சரியான ஸ்டிக்கர்களை தேர்வு செய்து பிறருக்கு அனுப்பலாம். இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.