இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் செல்போனை பேசுவதற்கு,தகவல் அனுப்புவதற்கு மற்றும் கேம் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் இன்னும் சில விஷயங்களை இதன் மூலம் செயல்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதாவது ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் லென்ஸ் வசதியை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்ய முடியும். கூகுள் லென்ஸை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து எந்த ஒரு உரையையும் நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.

அருகில் ஒலிக்கும் பாடலை அடையாளம் காண விரும்பினால் ஹலோ கூகுள் என்ன பாடல் ஒலிக்கிறது என்று குரல் உதவியாளர் கட்டளையை வழங்கினால் நீங்கள் googleளை கேட்கும் பாடலை என்ன என்பதை தெரியப்படுத்தவும்.

ஐ ஆர் பிளாஸ்டர் என்பதை பயன்படுத்தி டிவி மற்றும் ஏசி இவற்றை இத்துடன் இணைத்து ரிமோட் கண்ட்ரோல் ஆக வைத்துக் கொள்ளலாம்.

மெட்டல் டிரெக்டர் செயலியை பதிவிறக்கம் செய்து மெட்டல் டிரெக்டர் ஆகவும் பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டருக்கு வயர்லெஸ் மவுசை பயன்படுத்தினால் ப்ளூடூத் உதவியுடன் அதனை மொபைல் செட்டிங் சென்று இணைத்தால் மௌசாக பயன்படுத்த முடியும். உங்கள் கம்ப்யூட்டரில் மவுசரியாக வேலை செய்யவில்லை என்றால் போனை மௌசாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் மட்டும் இருந்துவிட்டால் யூட்யூப் வழியாக எந்த ஒரு விடயத்தையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்