மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மலிவு விலையில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மொபைல் போனில் நமக்கென ஒரு நம்பருடன் சிம்கார்டு கொடுக்கப்படும். இந்த சிம் கார்டை ஃபேன்சி நம்பர் என்று அதிக பணம் கொடுத்து வாங்கி வரும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால் நம்முடைய பிறந்த தேதியை மொபைல் நம்பராக மாற்றும் திட்டத்தை ஜியோ கொண்டு வந்துள்ளது. VIP Number வரிசையில் இந்த நுகர்வோர் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நம்பரை தெரிவு செய்யும் முதல் நான்கு அல்லது ஆறு எண்கள் நிலையானதாக இருக்கும் நிலையில் மீதமுள்ள நம்பரை உங்களுக்கு பிடித்தவாறு வைத்துக் கொள்ள முடியும்.

அதற்கு முதலில் https://www.jio.com/selfcare/choice-number/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அதில் சுய பாதுகாப்பு பிரிவிற்கு சென்று மை ஜியோ மொபைல் செயலி மூலம் பயனர்கள் நேரடியாக இதனை அணுகலாம். இதனைத் தொடர்ந்து பயனர்கள் மொபைல் நம்பர் தேர்வு பகுதிக்கு செல்ல வேண்டும். பின்னர் தங்களது தற்போதைய மொபைல் எண்ணை உள்ளிட்டு அதனை ஓடிபி மூலம் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான என்னை மாற்றுவதற்கு விருப்பம் வழங்கப்படும். அதில் கடைசி நான்கு அல்லது ஆறு இலக்க எண்களை தேர்வு செய்ய வேண்டும். பிறகு பணம் செலுத்தும் ஆப்ஷனுக்கு சென்று அங்கு 499 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் 24 மணி நேரத்தில் புதிய மொபைல் நம்பர் செயல்பட ஆரம்பித்து விடும்.