உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் வீடியோ அழைப்பின் போது பயனர்கள் தங்களுடைய மொபைல் துறையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது வீடியோ அழைப்புகளின் போது பயனர்கள் தங்களுடைய தொலைபேசி துறையை பகிர முடியும். Screen- sharing , ஹோஸ்ட் அவர்களின் திரையில் தோன்றும் உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

அலுவலக கூட்டங்கள் மற்றும் பிற விஷயங்களுக்கு இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ் அப் பயனர்கள் ஆவணங்களை உருவாக்க மற்றும் திரைப்பயிர்வு திறன்களுடன் விளக்கு காட்சிகளை காண்பிக்க இந்த புதிய அம்சம் அனுமதிக்கிறது. அதாவது தங்களின் தொலைபேசி அமைப்புகளில் ஏதேனும் ஒன்றை புதுப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் whatsapp வீடியோ அழைப்புத் திரை பகிர்வு அம்சத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மற்றவர்களுக்கு நீங்கள் உதவலாம். இந்த புதிய அம்சம் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது பகிர்வு ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட ஆப்கள் அல்லது முழுத்திரையையும் பகிர்வதற்கு இடையே தேர்வு செய்ய அனுமதிக்கிறது.