உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது டெக்ஸ்டாப் அப்ளிகேஷன்களில் whatsapp பயன்படுத்துவதற்கு whatsapp web மூலம் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களின் வாட்ஸ் அப்பை வேறொரு சாதனத்தில் பயன்படுத்தும் போது வெப் அல்லது ஆப்பிள் ஸ்கேன் குறியீடு மூலம் மொபைலில் உள்ள வாட்ஸ் அப்பில் புதிய பயன்பாட்டை இணைத்தல் என்ற பிரிவில் சென்று இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் தற்போது புதிய மாற்று வழி கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இது சிலருக்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றது. அதாவது whatsapp பீட்டா பயனர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பின் திரையின் காண்பிக்கப்படும் என் எழுத்து குறியீட்டை பயன்படுத்தி நம்முடைய மேனுவலாக உள்ளிட வேண்டும். அதனை க்யூ ஆர் கோடு வைத்து செய்வதை தற்போது மேனுவலாக செய்ய வேண்டும். வாட்ஸ் அப் வெப்பில் லிங்க் வித் போன் என்னை கிளிக் செய்ததும் ஒரு படிவம் தோன்றும். அதில் உங்களின் நாட்டின் குறியீடு மற்றும் மொபைல் எண்ணை குறிப்பிடுமாறு தோன்றிய பிறகு வாட்ஸ் அப் வெப்பில் உள் நுழைவு முறை தோன்றும்.

இதனைத் தொடர்ந்து நீங்கள் பின் தொடர் என்பதை கிளிக் செய்தால் எட்டு எழுத்துக்கள் கொண்ட என் எழுத்துக்கள் குறியீடுகள் ஹைப்பனால் பிரித்து காண்பிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் மொபைலில் வாட்ஸ் அப் செயல் முறையை தொடங்க வேண்டும். பின்னர் மொபைல் வாட்ஸ் அப்பில் உள்ள மெனுவை கிளிக் செய்த பிறகு புதிய சாதனத்தை இணை என்பதை தொடர வேண்டும். நீங்கள் மொபைல் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி கீழே உள்ள போன் நம்பருடன் இணைப்பை தொடரலாம். அப்படி செய்தால் whatsapp வெப் இணையத்தில் காட்டப்படும் குறியீட்டுக்கான விண்டோ திறக்கும். அதில் குறியீடு சரியாக இருந்தால் மட்டுமே நாம் உள் நுழைய முடியும். இதில் உங்களின் மொபைல் கேமரா சரி இல்லாமல் அல்லது உடைந்து இருந்தால் இந்த மாற்று வழியை நீங்கள் மிகவும் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.