உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு கூடுதலாக இரட்டிப்பு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது வாட்ஸ் அப் கால், மெசேஜ், வீடியோ கால், சாட்லாக், last seenஎன அனைத்து செயல்பாடுகளையும் தன்னிச்சையாக பயனாளர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் வாட்ஸ் அப் கணக்கை நான்கு ஊடகங்களிலும் லாகின் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில் லாகின் செய்யும் முறையும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என அறிவித்துள்ளது.