மெட்டா நிறுவனம் சமீபத்தில் திரெட்ஸ் என்ற புதிய செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கியுள்ள இந்த செயலியின் பதிவிறக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த செயலியில் டெக்ஸ்ட் அப்டேட்டுகள், ரிப்ளை, ரிபோஸ்ட், லைக், சேர் ஆகிய பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் இந்த செயலியில் நேரடியாக குறுந்தகவல் அனுப்பும் வசதி தற்போது வரை வழங்கப்படவில்லை. இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் கிரியேட்டர்கள் அளிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.