உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. அதன்படி பயனர்கள் தற்போது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வழங்கும் எமோஜிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் whatsapp அதன் சொந்த அனிமேஷன் எமோஜிகளை பயனர்களுக்கு விரைவில் கொண்டு வர உள்ளது. இந்த புதிய எமோஜிகள் மூலம் பயனர்கள் பொது அனுபவத்தை பெற உள்ளனர். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது m