Vivo Y35 ஸ்மார்ட் போனின் விலையை அந்நிறுவனமானது திடீரென்று குறைத்து உள்ளது. இந்த போன் தற்போது ரூ.16,999 என்ற புது கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும். ICICI, SBI, Yes Bank, Federal Bank, AU Small Finance மற்றும் IDFC First Bank போன்றவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வரை கூடுதல் கேஷ்பேக்கைப் பெறலாம்.

வி-ஷீல்டு பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பிற நன்மைகளையும் நுகர்வோர் பெறலாம். Vivo Y 35ன் விலையானது முன்பு ரூ.17,499 ஆக இருந்தது. எனினும் நிறுவனம் அதன் விலையை ரூ.500 குறைத்து உள்ளது. தற்போது அதன் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. போனில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் இருக்கிறது. எனினும் இது 4G போன் ஆகும்.