ஒரு சாதாரண டிவியை 20 வினாடிகளில் ஸ்மார்ட் TV-ஆக மாற்றுவது எப்படி? என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் TV ஆக மாற்ற நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. உங்களிடம் எச்டிஎம்ஐ கேபிள் மற்றும் போர்ட் கொண்ட மடிக்கணினி மட்டும் இருந்தால் போதும். பல பேர் வீட்டில் இந்த பொருட்களை வைத்திருப்பதால் அது யாருக்கும் பிரச்சனையாக இருக்காது.

உங்களிடம் HDMI கேபிள் இல்லையெனில் நீங்கள் அதை Amazon வழியே வாங்கலாம். அதோடு நீங்கள் வாங்கும் தரம், அம்சங்கள் மற்றும் பிராண்டின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 179 (அ) அதை விட சற்று அதிகமாக செலவாகும். இந்த முறை வேலை செய்ய உங்களது லேப்டாப்பில் HDMI போர்ட் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

ஏராளமான மடிக்கணினிகளில் இந்த போர்ட் இருக்கிறது. இந்த கேபிளுக்கான போர்ட்டை கொண்ட HDMI கேபிள் மற்றும் மடிக்கணினி இரண்டையும் பெற்றதும் நீங்கள் தயாராகிவிட்டீர்கள். TV-ல் லேப்டாப்பின் திரையை ஒளிபரப்ப வேண்டும். இது உங்களின் சாதாரண TVயை ஸ்மார்ட்டாக மாற்றும்.