யூனியன் பாங்க் ஆப் இந்தியா புதிய வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன கடன்களை பெறுவதற்கான செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடியில் அறிவித்துள்ளது. அதில் முக்கியமான நிபந்தனையும் உள்ளது. 700 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு தான் இந்த வசதி கிடைக்கும்.

இந்த சலுகை ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் 15 வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டு கடன் அல்லது காருக்கு கடனை வேறொரு வங்கி அல்லது வங்கியல்லா  நிதி நிறுவனத்தில் இருந்து மாற்றினாலும் இந்த தள்ளுபடியின் கீழ் பலனை பெற்றுக் கொள்ளலாம். கடைசி நாட்களில் ரெப்போ விகிதத்தை 6.5% பராமரிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்ததில் இந்த வசதி குறிப்பிட்டு வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.