ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற சிம்மாசனம் அப்பாண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் இருக்கிறது. இந்த கோவிலில் நாள்தோறும் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் கோவில் அதிகாரிகள் நேற்று முன்தினம் உண்டியலை எண்ணும் பொழுது அதில் ஒரு காசோலை இருந்துள்ளது. அந்த காசோலையில் 100 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவில் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகை காணிக்கையாக செலுத்தப்பட்டதே இல்லையாம். அதை போட்ட நபர் யார் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த காசோலை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்று அதிகாரிகள் அது குறித்து தகவல் கேட்ட பொழுது அவருடைய வங்கி கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் அதிகாரிகள் அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்ஸ் காசோலையை போட்டு சாமிக்கு அந்த நபர் விபூதி அடிக்க பார்த்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.