உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் நடந்த ஓர் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. ஒரு இளைஞர், கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணிடம் தவறான மெசேஜ்கள் மற்றும் ஆபாசமான கருத்துக்களை தொடர்ந்து அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண், திட்டமிட்டு அந்த இளைஞரை ரயில் நிலையத்திற்கு அழைத்து, அனைவரும் நடுவே நின்றபடியே பலமுறை கன்னத்தில் அறைந்தும், தாக்கியும், தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தும், அவருக்கு ஆதரவாகவும் இருந்தனர். சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன், அந்த பெண்ணின் தைரியத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். “பயமில்லாமல் இப்படித்தான் பெண்கள் எதிர்வினை அளிக்க வேண்டும்” என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பெண்ணிடமிருந்து புகார் பெறப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இச்சம்பவம் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பது குறித்த முக்கிய எடுத்துக்காட்டாக பேசப்படுகிறது.