பெங்களூருவில் உள்ள ஒரு பிரம்மாண்ட சொகுசு குடியிருப்பு சங்கத்தில் வசிக்கும் ராதிகா மற்றும் ஏகான்ஷ் என்ற இளம் தம்பதியினர், அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த வசதிகள் குறித்த வீடியோவைப் பகிர்ந்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர். மொத்தம் 23 கோபுரங்களைக் கொண்ட இந்த அதிநவீன சொசைட்டியில் ஒரு 2BHK வீட்டிற்கு இவர்கள் மாதம் 60,000 ரூபாய் வாடகை செலுத்துகின்றனர்.

ஆனால், அதற்கு ஈடாக அங்கே வழங்கப்படும் வசதிகள் பார்ப்போரை வாய் பிளக்க வைக்கின்றன. சுவிட்சர்லாந்து நாட்டின் இயற்கை எழிலை நினைவுபடுத்தும் வகையில் கண்ணை பறிக்கும் பசுமையான தோட்டங்கள், பிரம்மாண்ட புல்வெளிகள், செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக பூங்காக்கள், மூன்று நீச்சல் குளங்கள், அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் என ஒரு மினி நகரமே இந்த வளாகத்திற்குள் இயங்கி வருகிறது.

“>

இன்னும் ஒரு படி மேலே போய், இந்த சொசைட்டிக்குள்ளேயே உணவகம் மற்றும் பார்களுடன் கூடிய கிளப் ஹவுஸ் வசதியும், வெளியூர் விருந்தினர்கள் தங்குவதற்காக ஒரு மினி ‘விருந்தினர் ஹோட்டல்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காகத் தங்களுக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை கூடுதல் செலவான போதிலும், அந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

இந்த கூடுதல் செலவை வீண் விரயமாகக் கருதாமல், தங்களின் நிம்மதியான வாழ்க்கைக்கான ஒரு சிறந்த முதலீடாகவே பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.