தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, த.வெ.க. ஆட்சியை அமைப்பதைத் தடுக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கூட்டு வைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ‘மற்றும் சிலர்’ என்று குறிப்பிட்டு அ.தி.மு.க.வை அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அ.தி.மு.க.!” எனக் குறிப்பிட்டு, விஜய்யின் விமர்சனத்திற்கு அவர் கடுமையான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
