தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக திகழும் விஜய தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் புதிய படமான பேமிலி ஸ்டார் ஏப்ரல் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விஜய தேவரகொண்டா, சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை 25 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக கூறியிருந்தார். மேலும் அந்த விருதை ஏலம் விட்டதில் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.