உலகின் பணக்கார நடிகராக புராக் பியர்ஸ் திகழ்கிறார். மைட்டி டக்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் 17 வயதில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு டிஜிட்டல் பொழுதுபோக்கு துறை, இணையதள விளையாட்டு நிறுவனம் மற்றும் பிட்காயின் நிறுவனம் உள்ளிட்டவற்றை தொடங்கி 16,500 கோடி சொத்துக்கள் குவித்துள்ளார். விரைவில் 8000 கோடியை நன்கொடை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.