இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து வழிமுறைகளையும் எளிதாக்கியுள்ளார். அதாவது வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையம் போன்ற அனைத்து விவரங்களையும் வாக்காளர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளங்களில் இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தை அணுக வேண்டும். அதில் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பெயருடன் பிறந்த தேதி, தொகுதி அல்லது செல்போன் நம்பர் மூலமாக சோதனை மேற்கொள்ளலாம். அதேபோல வாக்குச்சாவடி மையத்தை பற்றி அறிந்து கொள்ள https://electoralsearch.eci.gov.in/pollingstation என்ற இணையதள பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் உங்களின் வாக்குச்சாவடி மையத்தை அறிந்து கொள்ள முடியும்.