வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கு புத்தகங்கள், 100 நாள் வேலை திட்ட பணி அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் உள்ள ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், எம் எல் ஏ மற்றும் எம்பிக்களுக்கான அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனவும் பூத் சிலிப்பை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.