உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 36,476 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளது. இந்த சாலை விபத்துகளினால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை மட்டுமே சுமார் 19,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தின் சாலைப்போக்குவரத்து செயலர் வெங்கடேஷ்வர்லு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது வாகன ஓட்டிகள் இனி வாகனத்தின் டேஷ் போர்டுக்கு பக்கத்தில் அவர்களின் குடும்ப போட்டோவை வைக்க வேண்டும். அவர்களின் குடும்ப போட்டோ கண் முன்னே இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த உத்தியை பயன்படுத்திதான் ஆந்திராவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இதே  உத்தியை தான் தற்போது  நாமும் பயன்படுத்தப் போகிறோம். மேலும் இதன்மூலம் கண்டிப்பாக சாலை விபத்துக்கள் குறையும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக கூறியுள்ளார்.