கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, கட்சி தலைவர் விஜய்யை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமரித்தது.

இந்த நிலையில், திமுக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நிச்சயமாக போலீசார் கைது செய்வார்கள். தேவையின்றி யாரையும் போலீசார் கைது செய்யமாட்டார்கள். ஆனால், தேவையான ஆதாரங்கள் இருந்தால், கைது செய்யப்படும் என்பது தெளிவானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஜய் வீட்டைச் சுற்றி போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது, வழக்கின் திடீர் திருப்பமாகக் கருதப்படுகிறது. சட்டப்படி நீதிமன்றத்தின் கருத்துக்கள் முக்கியமானவை என்பதையும், அதன்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். எனவே, தங்கள் செயல் அரசியலாக மாறக் கூடாது என்பதற்காகவே அரசு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என கூறப்படுகிறது.