பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் 5 முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். தற்போது அவர் திடீரென உயிரிழந்தது அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இவரது மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் நாளை (ஏப்.27) அம்மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.