இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமானவரித்துறை ‌ தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வருமான வரி செலுத்தும் போது ரீபண்ட் பெறுவதற்கான ‌‌ தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது.

இப்படி ‌ தவறான தகவல்கள் கொடுப்பது மற்றும் அந்த தகவல்களை மறைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுவரை நாட்டில் 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் மூன்றில் இரண்டு பங்கினர் புதிய வருமான வரிமுறைப்படி தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்தும்போது ரீபண்ட் கேட்பவர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் நிலையில் அதில் ஏதேனும் தவறு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.