உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இவர் தனது முதல் மனைவி மெக்கென்சி ஸ்காட்டை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக லாரன் சான்செஸ்ஸை காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தனது வருங்கால மனைவிக்காக 564 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் ஜெப் பெசோஸ். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 2.8 ஏக்கர் பரப்பளவில் 9259 சதுர அடியில் இந்த பங்களா அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான்ஜெப் பெசோஸ் தனது காதலி லாரன் சான்செஸ்க்கு 20 கோடி மதிப்பிலான வைர மோதிரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.