உலக நாடுகள் பலவற்றிலும் தேநீர் ஜாடி போன்ற கெட்டில் ஒன்றில் வைத்து கப்புகளில் ஊற்றப்படும். இந்நிலையில் உலகிலேயே மிக விலை உயர்ந்த தேநீர் கெட்டில் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அந்தக் கெட்டிலில் தேநீர் ஊற்றும் முன் அதை பயன்படுத்தலாமா இல்லை பாதுகாத்து வைத்துக் கொள்ளலாமா என பல முறை யோசிக்க தோன்றும்.

அத்தகைய வகையில் அந்த தேநீர் கெட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. உலக கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த கெட்டிலின் விலை 24 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெட்டில் 18 கேரட் மஞ்சள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கெட்டில் முழுவதிலும் வெட்டப்பட்ட வைரக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கெட்டிலின் நடுப்பகுதியில் ரூபி கல் பதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேநீர் கெட்டில் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.