இங்கிலாந்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி செரன் பிரைஸ். இவர் வடக்கு ஆப்பிரிக்கா மொரோக்கோ பகுதியில் உள்ள மிக உயர்ந்த மலையான Toubkal மலையின் உச்சியை அடைந்து சாதனை புரிந்துள்ளார். சுமார் 13 ஆயிரத்து 671 அடி உயரம் கொண்ட இந்த மலையில் ஆறு வயதில் ஏறி சாதனை படைத்தது பிரைஸ் ஒருவர் தான்.
இத்தகைய சவாலை சிறுமி தேர்ந்தெடுத்ததற்கு காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மருத்துவமனை ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக தான் பிரைஸ் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்கிறார். பலரும் அவரைப் பாராட்டும் நிலையில் இது பிரைஸின் முதல் வெற்றி அல்ல இதற்கு முன்னரும் பல சாதனைகளை புரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
