இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் மொபைல் ஹேண்ட்ஹெல்ட்  டிவைஸ் சேவையை எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த சேவையின் மூலம் வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து நேரடியாக பெற முடியும். இந்த திட்டத்தின் மூலமாக ரொக்க பணங்களை திரும்ப பெறுதல், பணம் செலுத்துதல், நிதி பரிமாற்றம் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் போன்ற பல சேவைகளை பெறலாம்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் டெக்னிக்கல் எரர் காரணமாக ஆன்லைன் பேமெண்ட்களில் சிக்கலை சந்தித்ததால் தற்போது இதனைப் போலவே மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக sbi வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதாவது யுபிஐ பரிவர்த்தனையில் அப்டேட் பணிகள் நடந்து வருவதால் சில இடையூறுகளை சந்திக்க நேரிடலாம் எனவும் இது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு sbi வழங்கிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.