இந்தியாவில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணியாற்றுபவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு பயணிப்பார்கள். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த மாதமே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அது மட்டுமல்லாமல் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என பண்டிகைகள் வருவதால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி லோக் மான்ய திலக் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ரயில் அக்டோபர் 20, 27, நவம்பர் 3, 10, 15, 24 மற்றும் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் தமிழகத்தில்  சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், சோரனூர், திரூர், கோழிக்கோடு வழியாக செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.