இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேமிப்பதற்கு ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ள நிலையில் குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் மகிலா சம்மான் சேமிப்பு திட்டம். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு முதலீட்டாளர்களுக்கு கணக்கு முதிர்வின்போது வழங்கப்படுகின்றது. இரண்டு வருட காப்பீடு திட்டமான இதில் 7.5  சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு பாதியிலேயே பணத்தை திரும்ப பெற விரும்பினால் ஒரு வருடத்திற்கு பிறகு 40 சதவீதம் தொகையை பெறலாம். மீதமுள்ள 60 சதவீதம் தொகையை கணக்கு முதிர்வடைந்த பிறகு பெற்றுக் கொள்ள முடியும். இருந்தாலும் இறப்பு உள்ளிட்ட காரணத்தினால் கணக்கை மொத்தமாக மூடிவிட்டு மொத்தமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.