இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதனால் வங்கி கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி கேஒய்சி விதிமுறைகளை கடுமையாக உத்தரவிட்டது. அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட உள்ளது. இந்த விதியின் படி கணக்கு சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தகவல்கள் குறித்த பதிவு செய்யப்படும் கேஒய்சி படிவத்தில் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இரண்டு மொபைல் எண்களை வழங்க நேரிடும்.

மேலும் அனைத்து கணக்குகளின் தகவல்களையும் ஒருங்கிணைக்கும் கொள்கையும் செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த விதி ஒரே மொபைல் எண்ணில் பல கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை பாதிக்கும் என கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கூட்டு கணக்குக்கான பான் நம்பர், ஆதார் நம்பர் மற்றும் தனிப்பட்ட மொபைல் எண் போன்ற இரண்டாம் நிலை அடையாளம் சரிபார்ப்பு முறையையும் ரிசர்வ் வங்கி அமல்படுத்த உள்ளது. இது எந்த ஒரு தனி நபரின் பல கணக்குத் தகவல்களையும் அணுக அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் அனைத்தும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.