இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை 16 தவணைக்கான உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பலரும் சமீபத்தில் வெளியான 16வது தவணை தொகை பெறாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாயிகள் தங்களுடைய தொலைபேசியில் பி எம் கிசான் செயலியை பதிவிறக்கம் செய்து இ கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இதனை முடிக்காதவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது. இதனை உடனடியாக செய்து உங்களுடைய வங்கி கணக்கில் பணத்தை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்.