பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால் கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.