கல்லூரியில் அல்லது பள்ளிகளில் இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்வது போன்ற சர்ச்சையான வீடியோக்கள் பரவலாக பரவி வருகிறது. இதேபோன்று மேற்கு வங்கத்தில் உள்ள மவுலானா அபுல் ஆசாத் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஒரு துறை தலைவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை திருமணம் செய்துள்ளார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்த வீடியோவில் முதலாம் ஆண்டு மாணவரை, துறை தலைவரான அந்த ஆசிரியர் இந்து பாரம்பரிய முறைப்படி வகுப்பறை உள்ளே திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த துறை தலைவர் மற்றும் மாணவரையும் கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது ப்ராஜெக்ட்க்காக திருமண போட்டோ ஷூட் எடுப்பதற்காக திருமணம் செய்வது போல் நடித்தோம் என துறை தலைவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
