2026 டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த நாயகன் சஞ்சு சாம்சன், கேரளாவின் ஒரு சாதாரண டீக்கடையில் மிக எளிமையாகக் காட்சியளித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ளூர் டீக்கடை ஒன்றிற்குச் சென்ற சஞ்சுவைச் சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களின் உலகக்கோப்பை நாயகனைக் கண்டதும் ஆச்சரியத்தில் உறைந்தனர். எவ்வித பந்தாவும் இன்றி அவர்களுடன் சகஜமாகப் பேசிய சஞ்சு சாம்சன், சிரித்த முகத்துடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
“எளிமையின் மனிதன்” (Man of Simplicity) என வர்ணிக்கப்படும் சஞ்சு சாம்சனின் இந்த நிஜ வாழ்க்கைச் செயல், அவர் ஏன் ரசிகர்களின் ஃபேவரைட் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
Man of simplicity ❤️
Sanju Samson spotted at a local tea shop in Kerala today. The staffs were surprised to see their World Cup Hero stop by and clicked pictures with them 😇 pic.twitter.com/b0VWFEyPe3
— Deepu (@deepu_drops) March 12, 2026
“>
டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் மற்றும் இறுதிப்போட்டியில் 89 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருது வென்ற பிறகும், தனது வேர்களை மறக்காமல் அவர் காட்டும் இந்தத் தனித்துவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
