சமூக ஊடகங்களில் குழந்தைகளின் கள்ளங்கபமற்ற, அழகான வீடியோக்கள் அடிக்கடி மக்களின் நெஞ்சங்களை வெல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு சிறிய பெண் குழந்தையின் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், தாய் தன் சிறு மகளை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கோபமாகத் திட்டுகிறார். வழக்கமாக அம்மாக்கள் திட்டும்போது குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம், ஆனால் இந்த சிறுமி அழுதுகொண்டே தன் அம்மாவுக்குக் கொடுத்த சாதுரியமான பதில் பார்ப்பவர்களின் இதயங்களை உருக வைத்துள்ளது.

“>

இதனால் சிறுமியின் அந்த அப்பாவியான பேச்சைக் கேட்டு கோபமாகத் திட்டிய தாயே ஒரு கட்டத்தில் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிடுகிறார். தன் பக்க நியாயத்தை முழு உண்மையாக அம்மாவிடம் வாதாடும் அந்த சிறுமியின் க்யூட்டான செய்கை நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வேடிக்கையான கமெண்டுகளையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் “குழந்தைகளிடம் அனைத்துக் கேள்விகளுக்கும் நாம் எதிர்பார்க்காத பதில்கள் எப்போதும் தயாராக இருக்கும்” என்றும், “அம்மா வைத்த வாதத்தையே மகள் திருப்பி அம்மாவிடமே முன்வைத்துவிட்டார்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களின் ரசனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.