இந்திய அணி உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய பிறகு, வீரர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றும், பெரிய விழாக்களில் கலந்துகொண்டும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்பதை சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்பிய சஞ்சு, தனது ரசிகர் ஒருவருக்காகச் செய்த செயல் இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

​ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவருடன் இணைந்து சஞ்சு சாம்சன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “வெற்றி என்பது கோப்பையில் மட்டுமல்ல, மக்களின் அன்பில்தான் இருக்கிறது” என்பதைத் தனது எளிமையால் உணர்த்தியுள்ளார் சஞ்சு. களத்தில் அவர் காட்டும் நிதானத்தை விட, நிஜ வாழ்க்கையில் அவர் காட்டும் இந்த மனிதநேயம் தான் அவரை ‘ரியல் ஹீரோ’வாக மாற்றியுள்ளது என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.