பொதுவாகக் காகங்கள் குச்சிகள், இலைகளை வைத்துத் தான் கூடு கட்டும். ஆனால், இந்த வைரல் வீடியோவில் இருக்கும் காகம் கொஞ்சம் ‘அட்வான்ஸ்’ ரகம் போல! சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சொசைட்டிகளில் துணி காயப்போட வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஹேங்கர்களைத் திருடி வந்து, ஒரு பிரம்மாண்டமான ஹேங்கர் கலெக்ஷனையே உருவாக்கி வைத்துள்ளது. பார்ப்பதற்கு இது ஒரு ‘ஹேங்கர் ஷோரூம்’ போலத் தெரிந்தாலும், உண்மையில் இது அந்த புத்திசாலி காகம் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஒரு இரும்பு கூடு என்பது தான் ஹைலைட்.

​”எங்க வீட்டு ஹேங்கர் எல்லாம் எங்க போச்சுன்னு இப்பதான் தெரியுது” என அந்தப் பகுதி மக்கள் தலையில் கை வைத்துப் புலம்பும் அளவுக்கு, இந்த காகம் ஒரு பெரிய ஹேங்கர் கடத்தல்காரனாகவே மாறிவிட்டது. ஆயிரக்கணக்கான இரும்பு ஹேங்கர்களை நேர்த்தியாக அடுக்கி இந்த காகம் செய்துள்ள இந்த வினோத இன்ஜினியரிங் வேலை, இப்போது சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. காகத்தின் இந்த அசாத்திய முயற்சியைப் பார்த்து நெட்டிசன்கள், “இது காக்கா இல்ல.. ஹேங்கர் ஸ்பெஷலிஸ்ட்” என ஜாலியாகப் பாராட்டி வருகின்றனர்.