கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில், இளம் வீரர் இஷான் கிஷன் தர்மசங்கடத்தில் நெளிந்த சுவாரசியமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

2021-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் நடந்தபோது, மும்பை இந்தியன்ஸ் டிரஸ்ஸிங் அறைக்குள் கலைந்த தலைமுடி மற்றும் காதில் இயர்பட்ஸ் அணிந்தபடி கூலாக நுழைந்த இஷான் கிஷன், தனது சக வீரர்களைச் செல்லமாகச் கிண்டலடித்தபடி  உள்ளே வந்துள்ளார்.

ஆனால், அங்கு ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் அமர்ந்திருப்பதை எதிர்பாராத இஷான், அவரைக் கண்டதும் அப்படியே உறைந்துபோய், அவசர அவசரமாகத் தனது கண்ணாடி மற்றும் இயர்பட்ஸைக் கழற்றிவிட்டு ஒரு பள்ளி மாணவனைப் போல “குட் மார்னிங் சார்” என்று வாழ்த்து தெரிவித்தார்.

“>

 

இஷான் கிஷனின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு கீரான் பொல்லார்ட் உள்ளிட்ட சக வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்த நிலையில், பின்னர் சச்சினிடம் மன்னிப்பு கேட்ட இஷான், அவரிடமிருந்து ஒரு டி-சர்ட்டையும் பரிசாகப் பெற்றுள்ளார். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷனின் இந்த பழைய குறும்பு வீடியோ, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.