பைல்ஸ் (மூலம்) அறுவை சிகிச்சை செய்து கொண்ட லோகோ பைலட் ஒருவருக்கு, ரயில்வே நிர்வாகம் மருத்துவ விடுப்பு வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தையல்கள் போடப்பட்டிருந்த நிலையிலும், அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் வேதனையடைந்த அந்த லோகோ பைலட், தனது மேலதிகாரிகள் முன்னிலையில் தனது பேண்ட்டைக் கழட்டி, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தையல்களைக் காட்டி தனது வலியையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்.
A loco pilot, after piles surgery, was refused medical leave.
He dropped his pants in front of seniors and showed them his stitches.
pic.twitter.com/XELzGnUDHa— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 4, 2026
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவை நிரூபிக்க ஒரு ஊழியர் இவ்வளவு தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நிர்வாகத்தின் பிடிவாதமான போக்கைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த நூதனப் போராட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
