தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் முதல் நாளில் 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் திரை வாழ்க்கையில் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவில் மூன்றாவது படம் என்ற சாதனையை லியோ திரைப்படம் படைத்துள்ளது.