தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ராதா. இவர் ராஜசேகர நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகா, துளசி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்  நடிகை ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஆண் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கார்த்திகா. இந்த புகைப்படத்தில் கையில் அவர் அணிந்திருக்கும் மோதிரம் ‘போகஸ்’ செய்து காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இவரது திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது