சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

விஜய் மற்றும் லோகேஷ் 2வது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது, பின் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று வெளியாக இருப்பதாக அறிவிப்பட்டது. நேற்று தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் முதல் பாடலான “நான் ரெடி” பாடல் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புது சாதனையை படைத்திருக்கிறது. இது மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ரிலீசான சில நிமிடங்களில் இருந்த பார்வையாளர்களை விட, “நா ரெடி” பாடலின் பார்வையாளர்கள் அதிகம் ஆகும். அதோடு நா ரெடி பாடல் 1 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதன்பின் 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதுகுறித்த போஸ்டர் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.