இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் தன்னுடைய 49 வது பிறந்த நாளை  நேற்று கொண்டாடிய நிலையில் லியோ’ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’  நேற்று வெளியானது.

இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது. இது ‘வாத்தி கம்மிங்’ பாடல் ரிலீசான சில நிமிடங்களில் இருந்த பார்வையாளர்களைவிட அதிகம். மேலும், 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.