அமெரிக்க நாட்டின் பிரபலமான பாப் பாடகியாக ரிஹானா வலம் வருகிறார். இவர் பாடகியாக மட்டுமின்றி நடிகை, பேஷன் டிசைனர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார். இவர் குட் கியாள் கோன் பேட், ரேட்டட் ஆர், லவுட், டால்க் தேட் டால்க் உட்பட பல்வேறு ஆல்பம் பாடல்கள் பாடி புகழ்பெற்றார். “Umbrella” எனும் இசை ஆல்பம் வாயிலாக இவர் முதல் கிராமி விருதை பெற்றார். சென்ற 2007-ம் வருடம் கிறிஸ் பிரவுன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரிஹானா கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2013ம் ஆண்டு பிரிந்தார்.

அதன்பின் ஹசன் ஜமீலுடன் வாழ்ந்து வந்த ரிஹானா அவரையும் விவாகரத்து செய்தார். அதனை தொடர்ந்து ராக்கி என்பவரை காதலித்து வந்த ரிஹானா 2020ம் ஆண்டு முதல் அவருடன் லிவ்விங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இப்போது மீண்டும் கர்ப்பமடைந்து உள்ளார்.

இந்த நிலையில் ரிஹானா பாரிசில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் கழுத்தில் கைக் கடிகாரம் போல் இருக்கும் வைர நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். 30 கேரட் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நெக்லஸ் இந்திய மதிப்பின் படி ரூ. 5.7 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ரிஹானாவின் நெக்லஸ் தான் இப்போது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாக இருக்கிறது.