ஷங்கர் டைரக்டில் கமல் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் பல கட்டங்களாக மும்முரமாக நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

அதன்பின் இந்தியன் -2 சூட்டிங் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்காக சென்னை விமான நிலையம் ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றிருக்கிறது. கடந்த 3 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில், நேற்று 4-வது நாளாக 500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை கொண்டு விமான தாக்குதலில் இருந்து தப்பித்து செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.