தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவரது நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியது. இதையடுத்து இவர் நடித்து வரும் படம் தான் காதல் தி கோர். இந்த படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். அதனை  தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜோதிகா.

அண்மை காலாமாக இவர் ஜிம் ஒர்க்அவுட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்த வீடியோக்களை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதன்படி தன் லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜோதிகா. 44 வயதாகும் ஜோதிகாவின் இந்த ஒர்க்அவுட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CtzBdK6JjFr/?utm_source=ig_web_copy_link