தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் மாமன்னன் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து சைரன், ரகு தாத்தா உட்பட பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல வங்கியின் விளம்பரத்தில் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்குடன் இணைந்து கீர்த்தி நடித்துள்ளார். இதில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு கீர்த்தி அசத்துகிறார். ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆக்ஷன் காட்சியில் மிரட்டும் கீர்த்தியின் இந்த வீடியோவானது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CtyvXfxJl7A/?utm_source=ig_web_copy_link