நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. எனினும் அவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா, Kisi Ka Bhai Kisi Ki Jaan என அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய தோல்வியடைந்தது.

இந்நிலையில் அவரை அடுத்து ஒப்பந்தம் செய்திருந்த படங்களிலிருந்து நீக்க துவங்கி இருக்கின்றனர். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டு உள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

அதோடு பவன் கல்யாணின் Ustaad Bhagat Singh திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு பதில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ராஷ்மிகா ஏற்கனவே புஷ்பா 2, அனிமல் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.