மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி மற்றும் வடிவேலு போன்றோர் நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படம் வருகிற ஜூன் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது மாரி செல்வராஜின் தேவர்மகன் திரைப்படம் பற்றி கமல்ஹாசன் பேசியது பரபரப்பை ஏறபடுத்தியது.

இப்போது மாமன்னன் திரைப்படத்தை கமல் முழுவதுமாக பார்த்துள்ளார். கமல்ஹாசனுக்காக ஸ்பெஷலாக ஸ்கிரீன் செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். படத்தை பார்த்து விட்டு கமல் மாரி செல்வராஜ் கையை பிடித்து வாழ்த்தினாராம்.