திரையுலகில் தனது அதிரடி நடிப்பால் முத்திரை பதித்த நடிகர் மன்சூர் அலிகான், தற்போது அரசியல் களத்திலும் அதே அதிரடியைத் தொடர்ந்து வருகிறார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்புமனுவை லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் முறைப்படி தாக்கல் செய்தார். பெரிய கூட்டணிகள் எதுவும் இன்றித் தனது கட்சி சார்பில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள மன்சூர் அலிகான், லால்குடி தொகுதியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த மன்சூர் அலிகான், இந்த முறை லால்குடி தொகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பது திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.